பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் வேட்பாளரே இல்லாமல் வாக்கு சேகரித்தார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிட உள்ளார், அவரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சூளைமேட்டில் நடந்த பரப்புரையில் தனியாகவே சென்று வேட்பாளருக்காக வாக்கு சேகரித்தார். ஜி.கே.வாசனின் பரப்புரையில் கலந்துகொள்ளாமல் தனியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் வினோஜ் செல்வம்.
மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் செல்வம் தொகுதிக்குள்பட்ட மிண்ட் தெரு பிள்ளையார் கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினார். சென்னை வண்ணாரப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த மத்திய சென்னை தொகுதியில் இதுவரை வணிகத்தை பெருக்க அரசு சார்பில் எந்த விதநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் கட்டமைப்புகளை மேம்படுத்த தொகுதி மக்களவை உறுப்பினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அது போல திருவல்லிகேணி மீன் சந்தைக்கும் போதிய கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றார்.