fbpx

காவி நிறத்தில் கவர்ச்சி உடை!!! தீபிகா படுகோனுக்கு அமைச்சர் கண்டனம்!!!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்த சூப்பர் ஹிட் ஜோடி, இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷரம் ரங்’ வெளியாகி ஒரே நாளில் 1.9 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகாபடுகோனே 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதான் படத்தின் பாடலில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, ‘பதான்’ திரைப்படம் முழுவதும் பல்வேறு தவறுகள் நிறைந்துள்ளது. இந்த படம் மக்கள் மனதில் நச்சு தன்மையை உருவாக அடிப்படையாகக் கொண்டது. ‘பேஷாரம் ரங்’ பாடலின் வரிகள் & பாடலில் அணிந்திருக்கும் காவி உடை மற்றும் பச்சை நிற ஆடைகள் திருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிடலாமா வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யும் என்றார்.

Kathir

Next Post

கவனம்...! மாதம் ரூ.2,000 உதவித்தொகை பெற இனி ஆதார் எண் கட்டாயம்...! அரசு அதிரடி அறிவிப்பு...!

Thu Dec 15 , 2022
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தின்‌ மூலம்‌ மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 பெறும்‌ அனைத்து மாற்றுத்திறனாளிகளும்‌ ஆதார்‌ எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் தருமபுரி மாவட்டத்தில்‌, மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000/- பெற்று வரும்‌ மனவளர்ச்சி குன்றியோர்‌, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்‌ தொழுநோயால்‌ பாதிக்கப்பட்டு குணமடைந்தோர்‌, தசைசிதைவு நோயால்‌ பாதிக்கப்பட்டோர்‌, முதுகு தண்டு வடம்‌, பார்க்கின்சன்‌ மற்றும்‌ நாள்பட்ட நரம்பியல்‌ நோயால்‌ […]

You May Like