fbpx

கண்களில் கண்ணாடி துண்டு.. ரத்தம் வடிய வடிய சித்ரவதை..!! கொடூரமாக தாக்கப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர்!!

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கடுமையாக தாக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. மிருகத்தனமான தாக்குதலால் கண் கண்ணாடியில் இருந்து கண்ணாடித் துண்டுகள் உடைந்து பெண்ணின் கண்களுக்குள் நுழைந்துள்ளது. இறந்தவரின் தலையை சுவரில் அறைந்ததில், தலையிலும் காயங்கள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க பாகங்களில் பல காயங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Read more ; “போரை நிறுத்துங்கள்..!!” பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்..!!

English Summary

Glass Shards In Eyes, Head Slammed Against Wall: Autopsy Reveals Horrific Assault On Kolkata Doctor

Next Post

ஒரு நிமிட கவனக்குறைவு.. ஹீட்டர் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!! எமனாக மாறிய செல்போன்..!!

Mon Aug 12 , 2024
Distracted by phone call, Telangana man places water heating rod under arm, dies

You May Like