Gmail பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு யூசர்கள் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதை எளிதாக்க கூகுள் நிறுவனம் தற்போது “செலக்ட் ஆல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பாலான அலுவலக வேலைகள் இமெயில் சார்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் Gmail அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் Gmail ஐ தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு யூசர்கள் தங்களது அக்கவுண்டுகளை மேனேஜ் செய்வதற்கு சிரமப்படுவது தெரியவந்துள்ளது. கூகுள் வழங்கும் இலவச இமெயில் சர்வீஸை பயன்படுத்தி பெர்சனல் கம்பியூட்டர் யூசர்கள் ஒரே ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலமாக பல்வேறு இமெயில் அக்கவுண்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனினும் ஆண்ட்ராய்டு யூஸர்களுக்கு இந்த ஆப்ஷன் கிடைப்பதில்லை. ஆண்ட்ராய்டு சாதனங்களில் யூசர்கள் ஒரு நேரத்தில் ஒரே ஒரு இமெயிலை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகவே ஜிமெயில் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதை எளிதாகுவதற்கு தற்போது கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, ஜிமெயில் அக்கவுண்ட்டை ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து பயன்படுத்தும் யூசர்களுக்கு “செலக்ட் ஆல்” (Select All) என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செலக்ட் ஆல் பட்டன் டெஸ்க்டாப் வெர்ஷனில் கிடைக்கிறது. இதில் ஒரே நேரத்தில் 50 இமெயில்களை செலக்ட் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. ஜிமெயிலில் வெளியாகி உள்ள இந்த டெஸ்க்டாப் வெர்ஷனில் கூடுதலாக “select all conversations in inbox” என்ற ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக யூசர்கள் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள இமெயில்களை செலக்ட் செய்வதற்கான ஆப்ஷனை பெறுகிறார்கள். இந்த செலக்ட் ஆல் பட்டன் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஆகிய இரண்டிலும் கிடைப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.