fbpx

8வது மற்றும் 10வது படித்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மல்டி பர்ப்பஸ் ஹெல்பர் மற்றும் செக்யூரிட்டி கார்டு பணிகளுக்கு காலியாக உள்ள மூன்று இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மல்டி பர்ப்பஸ் ஹெல்ப்பர் பணிகளை விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் எட்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செக்யூரிட்டி கார்ட் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகவும் அதிகபட்ச வயது 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,400 முதல் ரூ.10,000 வரை ஊதியம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைவாய்ப்பில் சேர தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை சகி ஒன் ஸ்டாப் சென்டர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்த மருத்துவமனைக்கு எதிரில், அரியலூர்-621704 என்ற முகவரிக்கு 24.03.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பெரு தகவல்களை அறிய gmch.gov.in என்ற இணையதளம் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கொத்தமல்லி டீ!... நோய் எதிர்ப்பு முதல் தோல் பிரச்சனை வரை அனைத்துக்கும் தீர்வு!...

Thu Mar 16 , 2023
கொத்தமல்லி டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், தோல் பிரச்சனைகள் நீங்கும். இதுதவிர இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. கொத்தமல்லியில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளன. கூடுதலாக, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன. கொத்தமல்லியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீ குடித்தால், பல பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. கொத்தமல்லி டீ சருமத்திற்கு […]

You May Like