கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வந்த பாதிரியார், கடந்த 2019ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கில் பாதிரியாரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட பாதிரியார் திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது.
தகாத உறவினை தெரிந்து கொண்ட பெண்ணின் கணவர், பாதிரியாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின்போது, ‘போய் தூக்கில் தொங்கு’ எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட பாதிரியார் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கின் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, “குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் வேண்டுமென்றே தற்கொலைக்கு தூண்டவில்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது. கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர் ‘போய் தூக்கில் தொங்கு’ எனக் கூறியதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.
Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!