fbpx

”உடனே கடைக்கு புறப்படுங்க”..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையே, சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 18) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.57,120-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.7,135-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : செம குட் நியூஸ்..!! இனி அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

In Chennai today (December 18), the price of gold jewelry fell by Rs. 120 per sovereign to Rs. 57,120, and one gram of gold fell by Rs. 20 to Rs. 7,135.

Chella

Next Post

உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் 'டிங்கா டிங்கா' நோய்.. 300 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!! - அறிகுறிகள் என்னென்ன?

Wed Dec 18 , 2024
What is 'Dinga Dinga', the excessive body-shaking disease leaving people in Uganda sick?

You May Like