பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படத்தின் முழு வெர்ஷன் 3.30 மணி நேரம் படம் என்றும் அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குறிய காட்சிகளுக்கு தணிக்கை குழு கத்தரி போட்டுள்ளதாக இயக்குநர் பிளஸ்ஸி சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
சவுதி அரேபியாவில் 3 ஆண்டுகள் அடிமையாக இருந்து ஆப்பிரிக்கர் ஒருத்தர் உதவியுடன் தப்பித்து அந்த பாலை வனத்தில் இருந்து நகரத்துக்கு வரும் நஜீப் அதன் பின்னர் 3 மாதங்கள் சவுதி சிறையில் அடைக்கப்பட்டு, அவுட் பாஸ் கிடைத்ததும் நாடு திரும்புகிறார். அவரது சொல்ல முடியாத அத்தனை சோகக் கதையையும் தெரிந்து கொண்டு எழுத்தாளர் பென்யாமின் 2008ம் ஆண்டு எழுதிய ஆடு ஜீவிதம் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
ஆடு ஜீவிதம் நாவல் கேரளாவில் இந்த அளவுக்கு கொண்டாடப்பட முக்கிய காரணமே சவுதியில் ஆடு மேய்க்கும் வேலைக்குத் தள்ளப்படும் நஜீப் ஒரு கட்டத்தில் ஆடாகவே மாறி ஆட்டுடன் உறவு கொண்ட கதைகளும் அடங்கியிருப்பது தான்
தனது மனைவி சைனுவை பிரிந்து பாலை வனத்தில் இருந்து இனிமேல் தப்பிக்கவே முடியாத சூழலில் ஆடு மேய்ப்பவராகவே மாறும் நஜீப் ஒரு கட்டத்தில் தன்னை ஆடாகவே நினைத்துக் கொள்கிறார். ஆடுகளுடன் பேசுவது, ஒரு ஆட்டுக்கு பிரசவ சமயத்தில் உதவி அதன் குட்டியை கையில் ஏந்தி வளர்ப்பது என ஆடுகளுடன் நட்பாகி விடும் நஜீப் ஒரு குளிர் காலத்தில் காம இச்சையை அடக்க முடியாமல் ஆடுகளுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அந்த நாவலில் இடம்பெற்றுள்ளது.
அதே போன்ற காட்சிகளை பிருத்விராஜை வைத்து படமாகவும் இயக்குநர் பிளஸ்ஸி இயக்கியுள்ளாராம். ஆனால், தணிக்கை குழு ஆடுகளுடனான பாலியல் உறவு காட்சிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என கட் பண்ணிட்டாங்க என சமீபத்திய பேட்டியில் பிளஸ்ஸி கூறியுள்ளார். இதனால் ரசிகர்களை ஷாக் ஆகி உள்ளார்.