fbpx

’கடவுள் வேண்டுதலை நிறைவேத்திட்டாரு’..!! ’அதனால நான் மேல ஏத்திட்டேன்’..!! இளைஞர் செய்த காரியத்தை பாருங்க..!!

கடவுளிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்டியலில் காணிக்கை செலுத்துவது, மொட்டை அடிப்பது, கிடா வெட்டுவது போன்றவைதான் நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் விஷயங்களாக இருக்கும். ஆனால் இங்கே ஒருவர் மிகவும் வித்தியாசமான காரியம் ஒன்றை செய்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மலைக்கோயில் ஒன்றின் படிகளில், மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள டார் என்னும் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இது மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் இருந்த காரணத்தால், அந்த கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், அந்த இளைஞருக்கு மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. மாறாக கடவுள் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினால், தனது காரை கோயிலுக்கு கொண்டு வருவேன் என அந்த இளைஞர் வேண்டியிருந்தாராம். இதன் காரணமாகவே இந்த வினோதமான காரியத்தை அவர் செய்துள்ளார்.

Chella

Next Post

நாளை (டிச.20) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியானது முக்கிய அறிவிப்பு..!!

Tue Dec 19 , 2023
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த அதி தீவிர கனமழையால் நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பஸ் பாதைகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. துாத்துக்குடியை துவம்சம் செய்யும் வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செமீ மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாத நிலையில், மீட்பு பணிகள் […]

You May Like