fbpx

இந்த ஊரில் கடவுள்கள் பேசுமாம்!… யாரிடம் பேசும்?… பகலில் ரம்மியம்!… இரவில் மர்மம்!… பல நூற்றாண்டுகளாக நிகழும் அதிசயம்!

பிகார் மாநிலத்தின் பக்சரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலில் பேசும் கடவுள்கள் இருக்கின்றன. இங்குள்ள அனைத்து கடவுளும் ஊர் அடங்கிய பின்னர் பேசுமாம். ஊர் அடங்கிய பின்ன யாரிடம் போய் கடவுள் பேசும் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த கோவிலில் உள்ள கடவுள்கள் ஒருவருக்கு ஒருவர் இரவில் பேசிக்கொள்ளுமாம். இரவு நேரத்தில் அடைக்கப்பட்ட கோவிலை சுற்றி யாரும் இல்லாத நேரத்திலும் இந்த கோவிலில் இருந்து யாரோ சிலர் பேசும் சத்தம் கேட்கிறதாம். இது இன்று நேற்று நடப்பது அல்ல பல நூறு ஆண்டுகளாக தினமும் நடக்கிறதாம்.

400 ஆண்டுகளுக்கு முன்பு பவானி மிஸ்ரா என்ற தந்திரி, தாந்த்ரீக வழிபாடுகள் செய்து தாந்த்ரீக சக்திகளைப் பெறுவதற்காக இந்தக் கோயில் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கோயில் கட்டப்பட்ட முதல் நாளிலிருந்து, உள்ளூர் மக்கள் இந்த கோவிலில் இருந்து இரவில் பல்வேறு ஒலிகளைக் கேட்டுள்ளனர்.

ஒலி மிகவும் தெளிவாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் குழு அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்தி வேளைக்குப் பிறகு, மனிதர்கள் யாரும் இல்லாதபோதும் கூட இங்கு பேசும் ஒலி கேட்பதை உறுதிப்படுத்தினர்.ஆனால் இன்று வரை அந்த ஒலிகள் எங்கிருந்து வருகிறது என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இக்கோயிலில் திரிபுரா, தூமாவதி, பகலாமுகி, தாரா, காளி, சின்னமஸ்தா, ஷோடசி, மாதங்கி, கமலா, உக்ர தாரா, புவனேஸ்வரி போன்ற பல்வேறு அவதாரங்களில் துர்கா தேவியின் பல தெய்வங்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் தத்தாத்ரேய பைரவர், படுக் பைரவர், அன்னபூர்ண பைரவர், கால பைரவர் மற்றும் மாதங்கி பைரவர் என்று பைரவரின் பல அவதாரங்களையும் காணலாம். பேசும் கடவுள்கள் குடியிருக்கும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பகலில் ரம்யமாக காட்சியளிக்கும் இந்த கோவில் இரவில் மட்டும் மர்ம இடமாக மாறி விடுகிறது.

Kokila

Next Post

விசித்ராவின் பாலியல் புகார்..!! சிக்கலில் விஜயகாந்த்..!! கணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Fri Nov 24 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை விசித்ரா, அதில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தன் வாழ்க்கையில் தான் சந்தித்த கசப்பான சம்பவம் பற்றி பகிர்ந்திருந்தார். விசித்ரா பேசும்போது யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், நெட்டிசன்கள் அது யார் என்கிற தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் அது 2001இல் பாலகிருஷ்ணா உடன் அவர் நடித்த தெலுங்கு படம் என்பதும், விசித்ராவை அறைந்தவர் ஏ.விஜய் என்கிற ஸ்டண்ட் மாஸ்டர் என்பதையும் தேடி […]

You May Like