தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களும் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் வருகின்ற 30 ஆம் தேதியுடன் இருவருமே பணி ஓய்வு பெறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, இறையன்புவுக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இயக்குனராக பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெற இருக்கிறேன். ஆனால் தனக்கு பணி ஆசை தீரவில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார். கல்லூரி மாணவர்களிடையே பேசிய சைலேந்திரபாபு சாதனை படைக்குமளவுக்கு நல்ல கல்வியை கற்றுக் கொள்ளுங்கள். உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் சைலேந்திரபாபு.