fbpx

Gokula Indira | ’கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி’..!! மாஜி அமைச்சர் கோகுல இந்திரா பரபரப்பு பேட்டி..!!

பாஜகவை வளர்ப்பதற்காக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளை அண்ணாமலை விமர்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Gokula Indira | மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடக் கோரி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்ப மனு அளித்தார். அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்காக விருப்ப மனு அளித்தார் கோகுல இந்திரா. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததால் கூட்டணியை முறித்துள்ளோம்.

அதிமுக கிளைக்கழகம் முதல் படிப்படியாக வளர்ந்த கட்சி, சிலர் நேற்று திருமணம் செய்து இன்றே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜகவை அவர் தவறாக வழிநடத்திச் செல்வதை போல் தெரிகிறது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதனை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என சிலர் இருந்தார்கள். தற்போது அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டதால் தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அதிமுக ஆயத்தமாகி வருகிறது. கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்” என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு எட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : Trisha | கூவத்தூர் த்ரிஷா விவகாரம்..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

Chella

Next Post

"நான் சொல்லி அரசியலுக்கு வந்தவர் தம்பி விஜய், ஆனால் ஸ்டைல் வேற" - தமிழக வெற்றிக் கழகம் குறித்து ஆண்டவர் அதிரடி.!

Wed Feb 21 , 2024
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். கட்சி பற்றிய அறிவிப்பை மதுரையில் வெளியிட்ட அவர் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ன பெயர் சூட்டினார். தமிழக அரசியலில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக தான் கட்சி தொடங்கியதாக தெரிவித்தார். 2019 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 ஆம் வருட சட்டமன்ற தேர்தல்களில் கமல்ஹாசனின் […]

You May Like