fbpx

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு..!! கைக்குழந்தையுடன் ஆஜரான சுவாதி..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ஆணவக் கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

யுவராஜ் உட்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவரின் ஆயுள் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த ஜூன் 2ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்து பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜின் தோழியான சுவாதிக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுவாதி கைக்குழந்தையுடன் ஆஜராகியிருந்தார். அவர் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை நேரில் நடத்த வேண்டும் என சுவாதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைகளின் போது நேரில் ஆஜராவதில் இருந்து சுவாதிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

”டெல்லியில் கூட்டணி.. தமிழ்நாட்டில் இல்லை”..!! ட்விஸ்ட் வைத்த அன்புமணி ராமதாஸ்..!!

Fri Aug 4 , 2023
அதிமுகவுடனான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. முற்றுகைப் போராட்டத்தின் போது பாமகவினர் பொது அமைதிக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாமக 2024 மக்களவைத் தேர்தலுக்கு டெல்லியில் (பாஜகவில்) கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் […]

You May Like