2023 2024 ஆம் நிதி வருடத்திற்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு தற்சமயம் ஆரம்பித்திருக்கிறது. இந்த தங்க பத்திர விற்பனை வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்கு சந்தை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த விதத்தில் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4 கிலோ தங்கம் வரையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்சமயம் 1 கிராம் 5,926 ரூபாய் என சொல்லப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலமாக ஒரு வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அத்துடன் இதில் பொது மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்னவென்றால், தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்தாலும், அதிகரித்தாலும் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் வழங்கப்படும்.
அதேபோன்று 3 வருடங்கள் இறையாண்மை தங்க பத்திரங்களை வைத்திருந்தால் அதன் மூலமாக ஆதாய வரியில் இருந்து விலக்கு வழங்கப்படும். ஆகவே இறையாண்மை தங்க பத்திரங்கள் மீது வரி விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.