fbpx

பெற்றோர்களே கவனம்!!! தங்க கைச்செயின் அணிந்திருந்த குழந்தை.. பஸ்ஸில் நடந்த விபரீதம்..

கண்டன் விளை அருகே மடவிளாகம் பகுதியை சேர்ந்த சுபிதா. இவர், சந்தை பஸ் நிலையத்தில் இருந்து மகளிர் இலவச அரசு பேருந்தில் நேற்று மதியம் தனது கைக்குழந்தையுடன் ஏறி உள்ளார். இவர் இனையம் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்தில் ஏறியது குறிப்பிடத்தக்கது. அவர் எரிய பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இந்நிலையில், பஸ் இரணியல் கோர்ட்டு அருகே வரும் போது சுபிதாவின் கைக்குழந்தையின் கையில் கிடந்த ½ பவுன் தங்க கை சங்கிலியை காணவில்லை. கூட்டத்தில் யாரோ திருடிவிட்டனர் என்பதை அறிந்த சுபிதா, இது குறித்து டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறியுள்ளார்.

உடனே டிரைவர் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் பஸ்சை நெய்யூர் தபால் நிலையம் அருகே ஓரமாக நிறுத்திவிட்டு இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, பஸ்சை திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து போலீசார் பஸ்சில் பயணம் செய்த அனைவரிடமும் சுமார் ½ மணி நேரமாக சோதனை நடத்தினர். ஆனால் கைச்செயின் கிடைக்கவில்லை. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் போலீசாரிடம் இரணியல் பகுதியில் பஸ்சை நிறுத்திய போது இரண்டு பெண்கள் வேகமாக இறங்கி சென்றதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், சுபிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து, பயணிகள் கூறிய இடத்தின் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Maha

Next Post

வனிதா விஜயகுமாருக்கு இப்படி ஒரு நோயா?? சோகத்தில் ரசிகர்கள்..

Sun Sep 24 , 2023
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகை என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பது வனிதா விஜயகுமார் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை சீரியல்கள், படங்கள் என பிஸியாகிவிட்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதோடு சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். எப்போதும் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார், சக பிரபலங்களை கலாய்த்தும் ட்ரெண்ட் ஆவார். இவர் தனக்கு ஒரு அபூர்வ நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆம், கடந்த ஒரே […]

You May Like