இன்ஸ்டாகிராமில் பேசி பழகி நல்லவன்போல் நடித்து சிறுமியின் மனதில் காதலை விதைத்த இளைஞன் மிரட்டி 60 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தலங்களில் எத்தனையோ குற்றங்கள் நடந்து வருகின்றது. காதலித்து ஏமாற்றுவது, காதல் என்ற பெயரிலேயே பல குற்றங்கள் நடந்து வருகின்றது. இதைத்தெரியாத சிறுமிகள் , பெண்கள் மீண்டும் மீண்டும் அதே குழியில் விழுகின்றனர். மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் , இவரது மனைவி மீனாட்சி இந்த தம்பதியினரின் 16 வயது மகள் இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞருடன் சேட் செய்து பழகி வந்துள்ளார். 6 மாதங்களாக பழகி வந்த நிலையில் எம்.கே. புரத்தை சேர்ந்த சதீஸ் என்ற அந்த நபர் சிறுமியை மிரட்டி நகைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார். வேறு வழியில்லாத நிலையில் அந்த சிறுமி நகைகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் பீரோவை திறந்து பார்த்த பெற்றோர் நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் 60 பவுன் காணாமல் போனது பற்றி கூறி புலம்பினர். அப்போதுதான் சிறுமி சதீஸ்குமார் என்ற இளைஞரிடம் நகையை ஏமாந்தது தெரியவந்தது. இவரிடம் நகையை வாங்கிய நபர் தலைமறைவாகி சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் சுந்தரம் புகார் அளித்தார். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெரிந்த நபராக இருந்தால் கூட கொடுத்துவிட்டு ஏமாற வேண்டாம் எனவும் விரைவில் உரிய நடிவடிக்கை எடுத்து 60 பவுனை மீட்டு தருவோம் என உறுதியளித்தனர்.