fbpx

Gold | சரசரவென சரிந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம் தான். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மளமளவென சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,110-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.78.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Read More : Ration | வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு..!! பெண்களே ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரெடியா..?

Chella

Next Post

Google | ’இனி அதுக்கு வாய்ப்பே இல்ல’..!! கூகுள் நிறுவனத்துடன் தேர்தல் ஆணையம் முக்கிய ஒப்பந்தம்..!!

Wed Mar 13 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில், பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க […]

You May Like