19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் பி[அள்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்ப்பட்டு வருண் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மட்டும் 9 பதக்கங்களை குவித்துள்ளனர்இந்திய வீரர்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு குழு பிரிவில், ஜோதி மற்றும் பிரவீன் ஆகிய இந்திய வீரர்கள் தென்கொரியாவை 159 – 158 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தந்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய இதுவரை 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது இந்தியா.
இன்றைய தினம் தொடக்கத்தில் தங்க பதக்கத்துடன் தனது வேட்டையை தொண்டங்கியுள்ளனர் இந்தியா வீரர்கள். மேலும் மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87 கிலோ பிரிவில் 4-3 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சுனில் குமார் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 87 கிலோ பிரிவில் இறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஆனால் மல்யுத்தம் ஆண்கள் கிரேகோ-ரேமன் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஞானிந் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளார்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்டு ஆப் 16 போட்டி 4ல் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் பிரனோய் ஹசீனா சுனில் குமார் காலிறுத்திக்கு முன்னேறினார். அதேபோல் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் ரவுண்டு ஆப் 16 போட்டி 4ல் இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுத்திக்கு முன்னேறினார்.
ஆசியா விளையாட்டு தொடர் புள்ளிப்பட்டியல் :
நிலை | நாடு | Gold | Silver | Bronze | Total |
1 | சீனா | 164 | 90 | 46 | 300 |
2 | தென் கொரியா | 32 | 43 | 65 | 140 |
3 | ஜப்பான் | 33 | 48 | 50 | 131 |
4 | இந்தியா | 16 | 26 | 29 | 71 |
5 | உஸ்பெகிஸ்தான் | 14 | 15 | 21 | 50 |
6 | கஜகஸ்தான் | 05 | 10 | 32 | 47 |
7 | ஹாங்காங், சீனா | 06 | 15 | 24 | 45 |
8 | தாய்லாந்து | 10 | 12 | 20 | 42 |
9 | சீன தைபே | 12 | 10 | 19 | 41 |
10 | ஈரான் இஸ்லாமிய குடியரசு | 6 | 14 | 16 | 36 |