fbpx

தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. குமுறும் நகைப்பிரியர்கள்..! இன்றைய நிலவரம் என்ன..?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், மார்ச் 5 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 64,520க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.1,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more:இந்தியா மீது ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும்!. அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!

English Summary

Gold price action increase! Today’s situation

Next Post

முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது..!! எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு.. விவரம் இதோ..

Wed Mar 5 , 2025
All party meeting started under the leadership of Chief Minister M.K.Stalin..!!

You May Like