தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்க தயக்கம் காட்டினர்.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 44,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 30 காசுகள் சரிந்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.