fbpx

தொடர்ந்து சரிவு..!! அதிரடியாக ரூ.880 குறைந்த தங்கம்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையே, சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது

இந்நிலையில், இன்று (டிசம்பர் 20) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.7,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : சிறையில் வைத்து சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்த போலீஸ்..!! இப்போ என்ன வழக்கு தெரியுமா..?

English Summary

Today (December 20) in Chennai, 22-carat gold jewelry is being sold at a price of Rs. 240 per sovereign to Rs. 56,320, and one gram of gold is being sold at a price of Rs. 7,040, down by Rs. 30.

Chella

Next Post

நடுங்கும் கன்னியாகுமரி..!! ரத்த வாடையை மோப்பம் பிடித்த நாய்..!! மர்ம பையில் கிடந்த தலை, உடல்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Fri Dec 20 , 2024
They were shocked to see Maria Sandhya's body in pieces inside the bags.

You May Like