fbpx

இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே…! தங்கம் விலை மேலும் உயர்வு…! எவ்வளவு தெரியுமா..!

சவரனுக்கு ரூ.66,000-ஐ எட்டியுள்ளது தங்கத்தின் விலை.

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது.

இதற்கிடையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை ஒரு காலக்கட்டத்தில் நிலைத்திருந்த பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. சமீபத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.65,000-ஐ கடந்த நிலையில், தற்போது ரூ.66,000-ஐ எட்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்படி, சென்னையில் மார்ச் 18ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.8,250 க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.11.90-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,11,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுமா..? மத்திய அரசு நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்..!!

English Summary

Gold price hits new high.. Do you know how much a razor is..?

Next Post

’முடிந்தால் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பாருங்கள்’..!! அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு..!!

Tue Mar 18 , 2025
Minister Sekarbabu has criticized the fact that people like Annamalai are the state president of a party as the biggest curse for Tamil Nadu.

You May Like