ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.71,000-ஐ கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது, நகை வாங்க விழைவோருக்கு பேரிடியாக உள்ளது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.
கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற இரக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Read more: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாமாக வெளியேறினால் ரொக்கப்பரிசு!. அதிபர் டிரம்ப் அதிரடி!