fbpx

Gold Rate | தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை வாங்க பெஸ்ட் டைம்.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்ரவரி 28) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ. 7,960-க்கும், சவரனுக்கு ரூ.500 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.63,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ஒரு கிலோ ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more:தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது..!! – ஆளுநர் ஆர்.என்.ரவி

English Summary

Gold price in continuous decline.. Right time to buy jewelry..

Next Post

100 கோடி இந்தியர்களிடம் விரும்பியபடி செலவழிக்க பணம் இல்லை..!! ஷாக் ரிப்போர்ட்

Fri Feb 28 , 2025
100 crore Indians have no extra money to spend: Report

You May Like