fbpx

பெண்களே கவனிங்க.. தங்கம் விலை இன்று குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை ஒரு சசவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4,838-க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ.62.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

“ அன்பு சகோதரர் இபிஎஸ்..” மீண்டும் இணைந்து செயல்பட அழைப்பு... ஓபிஎஸ் பேசியதை கவனிச்சீங்களா..?

Thu Aug 18 , 2022
அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.. அவரின் மறைவுக்கு பிறகு 30 ஆண்டுகாலம் அதிமுகவை கட்டி காத்து யாராலும் வெல்ல முடியாத மாபெரும் இயக்கமாக மாற்றினார்.. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை […]
eps

You May Like