fbpx

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் பெண்களுக்கு மிகவும் பி டித்தமான ஒன்றாகும். இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்தே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (டிசம்பர் 15) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830ஆக விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 50,400-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராமுக்கு ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

அச்சுறுத்தும் நிமோனியா!… சுவாச நிலையை கட்டுப்படுத்தும் 6 உணவுக் குறிப்புகள்!

Fri Dec 15 , 2023
சீனாவில் சமீபத்தில் நிமோனியா வெடித்ததை அடுத்து, வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. நிமோனியா சிகிச்சையில் மருத்துவத் தலையீடுகள் இன்றியமையாததாக இருந்தாலும், சரியான உணவுத் தேர்வுகள் நிமோனியாவை நிர்வகிப்பதற்கும் மீட்பதற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும். எனவே, நிமோனியா சிகிச்சையின் சுவாச நிலையை கட்டுப்படுத்தும் 6 உணவுகள் குறித்து இந்த தொக்குப்பில் பார்க்கலாம். நோயெதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள்: நோயெதிர்ப்பு அமைப்பு, நிமோனியா உட்பட எந்தவொரு தொற்றுநோய்க்கும் உடலின் பாதுகாப்பாக செயல்படுகிறது. இந்த […]

You May Like