fbpx

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. ஒரே நாளில் ரூ.640 விலை குறைந்ததால் மகிழ்ச்சி..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 ரூ.42,680க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 குறைந்து ரூ.74.20க்கு விற்பனைசெய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

காங்கிரஸ் கட்சியில் இணையும் பிரபல நடிகர்...? கர்நாடக அரசியலில் பரபரப்பு..

Sat Feb 4 , 2023
நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. 2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த […]

You May Like