fbpx

ஒரே நாளில் ரூ.280 குறைந்த தங்கம் விலை.. குஷியில் பெண்கள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,770-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது ஒரு கிராம் வெள்ளி 70 காசு குறைந்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

கனமழையால் பயங்கர நிலச்சரிவு..! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேர்..! இருவர் சடலமாக மீட்பு..!

Mon Aug 29 , 2022
கேரள மாநிலம் தொடுபுழா அருகேயுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிறுமி உள்பட 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகேயுள்ள ஒரு மலைக் கிராமத்தில் […]
பயங்கர நிலச்சரிவு..! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேர்..! இருவர் சடலமாக மீட்பு..!

You May Like