fbpx

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? இன்றைய விலை நிலவரம் இதோ

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, கடந்த நாங்கு நாட்களாக இறங்கு முகத்தில் இருந்து வந்தது.

சென்னையில் நேற்றுமுன் தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 55,480 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 6,995க்கும், சவரனுக்கு ரூ. 480க்கும் உயர்ந்து ரூ.55,960 க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

Read more ; Madhya Pradesh : மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் போது சிரித்த அதிகாரிக்கு நோட்டீஸ்..!!

English Summary

Gold price rise again.. Do you know how much a shaver? Here’s today’s pricing

Next Post

கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து..!! போலி பிடிவாரண்ட்..!! சிக்கிய மேலாளர்..!!

Mon Nov 18 , 2024
The action of the manager of the financial institution who called the woman on WhatsApp video, filmed it and sent it to her relatives and issued a fake arrest warrant has shocked.

You May Like