fbpx

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.38,792-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அட்சய திருதியை..! தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு டன் தங்கம் விற்பனையா?

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.4,849-க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.38,792-க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.63.30க்கு விற்பனையாகிறாது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு குட்நியூஸ்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Wed Aug 17 , 2022
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, […]

You May Like