fbpx

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4640-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.62க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் முதல் இந்திய பிரதமரானது வரை... மோடி பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..

Sat Sep 17 , 2022
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1950-ம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று குஜராத்தின் வாட்நகரில் தாமோதர் தாஸ் மோடி மற்றும் ஹீராபென் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் ஈர்க்கும் தலைவராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகராக பிரதமர் மோடியின் அரசியல் பயணம் தொடங்கியது. […]
மோடி

You May Like