fbpx

ஒரே நாளில் ரூ.224 உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,880க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.5,235க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,880க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.70.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.224 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடிகள்..!! அறிக்கை கேட்கும் டிஎன்பிஎஸ்சி..!! கலக்கத்தில் அதிகாரிகள்..!!

Wed Mar 1 , 2023
குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் […]

You May Like