fbpx

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,500-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

டெக்னாலஜியின் வேகம்.. டிஜிட்டல் மயம்.. அசத்தும் குரங்குகள்..!

Fri Jan 20 , 2023
மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு குரங்குகள் ஸ்மார்ட்போனை ஆப்பரேட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் போது டிஜிட்டல் மயம் எந்த அளவிற்கு இந்த உலகத்தில் முன்னேறி உள்ளது என்பதை காட்டுவதாக ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.  குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ஓரிடத்தில் மூன்று குரங்குகள் ஒன்றாக அமர்ந்திருக்கிறது. அப்போது அருகில் செல்லும் நபரானவர் தனது […]

You May Like