fbpx

எகிறி அடிக்கும் தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.320 உயர்வு..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது.

இதற்கிடையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை ஒரு காலக்கட்டத்தில் நிலைத்திருந்த பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. சமீபத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.65,000-ஐ கடந்த நிலையில், தற்போது ரூ.66,000-ஐ எட்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மார்ச் 19ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.66,320-க்கு விற்பனையாகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது.

Read More : ரூ.200 குவாட்டர் 240 ரூபாயா..? புலம்பிய மதுப்பிரியர்..!! போதையில் டாஸ்மாக் ஊழியர் செய்த செயல்..!! வைரலாகும் வீடியோ..!!

English Summary

In Chennai, the price of gold jewelry has increased by Rs. 320 per sovereign, selling for Rs. 66,320.

Chella

Next Post

அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைப்பதில் சிக்கல்.. நடுத்தர மக்களுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி..!!

Wed Mar 19 , 2025
New restrictions imposed by the Reserve Bank of India have created problems for those who mortgage gold jewelry in banks.

You May Like