fbpx

இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. 8 நாட்களில் ரூ.2,360 அதிகரிப்பு.. நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனையாகிறது.. இதே பொல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100க்கு விற்பனையாகிறது.

கடந்த 10-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. ஆனால் 15-ம் தேதி மட்டும் தங்கம் விலை சற்று குறைந்தது.. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.. இதன் மூலம் சென்னையில் 8 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 உயர்ந்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

விண்வெளிக்கு சுற்றுலா போகணுமா..? செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா..? இஸ்ரோவின் அசத்தல் திட்டம்..!!

Fri Mar 17 , 2023
2030ஆம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ”இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலாப் பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும். விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். இஸ்ரோ […]

You May Like