fbpx

திடீரென சரிந்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரத்தை நீங்களே பாருங்க..!! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது. அதன் பின்னர், பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,530 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் தங்கம், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6000-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.48,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் நேற்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.78.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி 78,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

காதலியின் திருமணத்தை நிறுத்த தந்தையை கொல்ல முயற்சித்த காதலன்…..! ஆனால் இறுதி காத்திருந்த அதிர்ச்சி….!

Wed Sep 6 , 2023
தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க காதலியின் குடும்பத்தார் முயற்சித்ததால், காதலியின் தந்தையை கொலை செய்ய முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே இருக்கின்ற அணைக்கரை பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை, போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. […]

You May Like