fbpx

விழிபிதுங்க வைக்கும் தங்கம் விலை!! ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு!!

ஒரு சவரன் தங்கம் விலை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.54 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. என்னதான் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டாலும் மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. அட்சயதிரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடியும். கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் கூடுதலாக இந்த ஆண்டு தங்கம் விற்பனையாகியுள்ளதாம். அதாவது அட்சய திரிதியை நாளில் 22 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கூட தொடும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறினார்.

தங்கம் விலை கடந்த 2013 ஆம் அண்டு ஒரு கிராம் வெறும் 1,500 தான் இருந்தது. ஒரு சவரன் 12 ஆயிரம் ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஒரு சவரன் 55 ஆயிரம் என்ற அளவுக்கு விலை உயர்ந்து விட்டது. இந்த 10 வருடத்தில் தங்கத்தின் விலை 4 மடங்கு உயர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்பது பெரிய விஷயமே இல்லை. இதே 2014ல் அடுத்த 10 வருசத்தில் ஒரு சவரன் 55 ஆயிரம், 60 ஆயிரத்திற்கு விற்கும் என சொல்லியிருந்தால் தப்பாக சொல்வதாக சொல்லியிருப்பார்கள். 2030க்குள் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் வந்து விடும். இன்னும் உயரக் கூட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக தங்கம் விலை உயரும். அதே மாதிரி கோவிட் போன்ற நோய் வந்தால் நாம் கருதுவதை விட அபரிமிதமாக தங்கம் விலை உயரும். இப்போ இருக்கிற நிலைமையை வைத்து பார்த்தால் கூட 2030க்குள் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொடும் என்பதில் சந்தேகமும் இல்லை. தங்கம் விலை குறைவதற்கு மிக மிக வாய்ப்பு குறைவு. இன்னைக்கு இருக்கிற பொருளாதார வீழ்ச்சியை அடிப்படையில் பார்த்தால் தங்கம் விலை தொடர்ந்து உயரும். கடந்த ஆண்டை விட அட்சயை திரிதியை அன்று 30 சதவிகிதம் கூடுதலாக தங்கம் விற்றது. தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறது.இந்த பணத்தை சிறு சேமிப்பு திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த சேமிப்பு தங்கமாக மாறுகிறது என்று கூட சொல்லலாம். இந்த திட்டம் வரவேற்கக்கக் கூடிய ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

Read More: BOB வங்கியில் வேலைவாய்ப்பு… டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

Rupa

Next Post

பத்திரங்களில் சிறுபிழை..! மக்களை அலைக்கழிக்க கூடாது!! அதிரடி உத்தரவு போட்ட பத்திரப் பதிவுத்துறை!!

Mon May 13 , 2024
பத்திர பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் இது தொடர்பாக சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சொத்து பத்திரம் என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம். அதில் மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவை சரியாக […]

You May Like