fbpx

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… சவரன் ரூ.43,000ஐ கடந்ததால் அதிர்ச்சி…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,380க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,000ஐ கடந்து விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Maha

Next Post

’10 ரூபாய் நோட்டை கூட எண்ணத் தெரியல’..!! கடைசி நேரத்தில் மணப்பெண் வைத்த டெஸ்டால் சிக்கிய மணமகன்..!!

Thu Jan 26 , 2023
மணமகனுக்கு 10 ரூபாய் நோட்டை எண்ணத் தெரியவில்லை எனக் கூறி மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்த ரீட்டா சிங் என்ற பெண் கடைசி நேரத்தில் தன்னுடைய திருமணத்தை நிறுத்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். திருமணத்துக்கான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளையின் நடத்தை வித்தியாசமாக இருந்ததைக் கண்ட திருமண புரோகிதர் (Priest) பெண் வீட்டாரிடம் இது குறித்து கூறியிருக்கிறார். இதையடுத்து, மணமகனுக்கு டெஸ்ட் வைக்க […]

You May Like