fbpx

ரூ.59,000-ஐ நெருங்க காத்திருக்கும் தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15%இல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால், தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை குறித்து தற்போது பார்க்கலாம்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,295-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்..!! வாலிபரின் வெறிச்செயல்..!!

English Summary

The price of 22 carat jewelery gold rose by Rs 80 per sawan to Rs 58,360 per sawan in Chennai today.

Chella

Next Post

தோசை தொண்டையில் சிக்கியதில் ஒருவர் மரணம்.. தொண்டையில் உணவு சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

Fri Oct 25 , 2024
Kurnool Man Dies After Choking on A Dosa; What To Do When Food Gets Stuck In Your Throat?

You May Like