fbpx

தங்கம் விலை இன்று உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.4,640-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.62க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,300-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

அதிர்ச்சி..!! திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிக்கொன்ற லோக்கல் தாதா லோகம்மா..! பரபரப்பு

Tue Sep 20 , 2022
சென்னையில் திமுக பிரமுகரை ரவுடி பெண் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (35). திமுக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான லோகம்மாள் (43) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் ரவுடி லோகம்மாள், […]
அதிர்ச்சி..!! திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிக்கொன்ற லோக்கல் தாதா லோகம்மா..! பரபரப்பு

You May Like