fbpx

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.352 குறைந்ததால் மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்… வெள்ளி விலையும் சரிவு..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

விநாயகர் சிலைக்கு காவல்..! இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்..! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

Thu Sep 1 , 2022
செங்கல்பட்டு பகுதியில் விநாயகர் சிலை அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா (28). இந்நிலையில், இவரது வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு உட்கார்ந்து ராஜேஷ் கண்ணா மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோர் பேசிக் […]
விநாயகர் சிலைக்கு காவல்..! இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்..! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

You May Like