fbpx

இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..

சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி தீபாவளியன்று ரூ.59,640 என்ற புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. அதன் பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.

ஆனால் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்திருந்த நிலையில் பின்னர் குறைவதும், மீண்டும் உயர்வதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அதன்படி தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்திருந்தது.

இந்த சூழலில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு, ரூ. 15 குறைந்து ரூ.7090க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : குட் நியூஸ்…! மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை…! விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…!

Rupa

Next Post

காரைக்கால் - மகாபலிபுரம்..!! கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்..!! தமிழ்நாட்டிற்கு மீண்டும் ரெட் அலர்ட்..!!

Thu Nov 28 , 2024
Cyclone Fangal is expected to weaken and cross the coast between Karaikal and Mahabalipuram on the 30th.

You May Like