fbpx

Gold Rate | மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்வு..!! – நகைப்பிரியர்கள் ஷாக்

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 12ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.2000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,09,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: பாகிஸ்தான் ரயில் கடத்தல் : பிணைக் கைதிகளுக்கு ஈடாக அரசியல் கைதிகளை விடுவிக்க பயங்கரவாதிகள் அமைப்பு கெடு..!!

English Summary

Gold prices have started rising again.. a sovereign has risen by Rs.360..!!

Next Post

தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1,635 பள்ளிகளில் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர்..!! - அன்பில் மகேஷ் பதிலடி!

Wed Mar 12 , 2025
Only 15.2 lakh students in Tamil Nadu study trilingually: Minister Anbil Mahesh

You May Like