fbpx

மகளிர் தினத்தன்று எகிறிய தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 64 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 8ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,040க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

Read more:முதல்முறை திமுக பெயரை சொல்லி விமர்சித்த விஜய்.. 2026-யில் எல்லாம் மாறும் என உறுதி..!! – மகளிர் தினத்தில் வீடியோ வெளியீடு

English Summary

Gold prices increase on Women’s Day

Next Post

தமிழ்நாடு அரசின் முழு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..? மறைமுக வரி, சலுகைகள்..!! வெளியான பரபரப்பு தகவல்

Sat Mar 8 , 2025
With the Tamil Nadu government's full budget set to be presented on March 14, it has been reported that some key demands are set to be met.

You May Like