fbpx

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.37,000-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,625-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,000-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

இந்தியாவில் எத்தனை பேர் சமஸ்கிருதம் பேசுகின்றனர் தெரியுமா..? மத்திய அரசு வெளியிட்ட தகவல்...

Wed Sep 28 , 2022
நாட்டில் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. ஆக்ராவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் சமூக ஆர்வலருமான டாக்டர்.தேவாஷிஷ் பட்டாச்சார்யா தாக்கல் செய்த ஆர்.டி.ஐ விண்ணப்பத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் மொழித் துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 0.002 சதவீதம் பேர் […]

You May Like