fbpx

Gold Rate | 64 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? நகைப்பிரியர்கள் ஷாக்..

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 63ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில்,  சென்னையில் இன்று (பிப்ரவரி 19) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.8,035-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,280-க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more : Tn Govt: நாளை காலை 10 முதல் மாலை 5 மணி வரை இலவச ChatGPT பயிற்சி…!

English Summary

Gold prices rose by Rs 520 per quintal

Next Post

90's கிட்ஸின் ஃபேவரைட் Parleg-G பிஸ்கட்டின் வெற்றிக் கதை.. அதில் உள்ள குழந்தை புகைப்படம் யூகமா..?

Wed Feb 19 , 2025
The world's best-selling biscuit with over Rs 8,000 cr sales and mystery of the iconic Parle-G girl, once rumoured to be Sudha Murty

You May Like