fbpx

Gold Rate | வாரத்தின் முதல் நாள்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் இதோ..!!

ஒரு நாட்டின் தங்கத்தின் (Gold) கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது. அதன் பின்னர், பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 43,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,495 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

மக்களே எச்சரிக்கை!… உடல்பருமன் 18 வகையான புற்றுநோய்களை உண்டாக்கும்!… ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Mon Aug 14 , 2023
புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக உடல் பருமனின் விளைவாக கிட்டத்தட்ட 8% புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய நவீன காலத்திற்கேற்ப உணவு முறை பழக்கங்கள் மற்றும் தொழில் சார்ந்தவைகளால் நமது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நீரழிவு மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், சமீபத்தில் நடத்தப்பட்ட […]

You May Like