fbpx

Gold Rate: தடாலடியாக 2 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற இரக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் (ஏப்ரல் 24) தங்கம் விலை குறைந்தது. தங்கம் கிராமுக்கு ரூ.10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,005-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: “ஐ லவ்யூ நானா” காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த தந்தைக்கு மகனின் உருக்கமான விடை..!!

English Summary

Gold Rate: Gold price drops for the 2nd day.. Here is today’s situation..!!

Next Post

HBD| கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் இன்று!. யாராலும் முறியடிக்க முடியாத சாதனைகள் இதோ!

Thu Apr 24 , 2025
Cricket legend Sachin Tendulkar's birthday is today! Here are his unbreakable achievements!

You May Like