ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.57,280-க்கு விற்பனை செய்யப்படுவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால், தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது. எனினும் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : கால் டாக்சி ஓட்டுநருடன் கள்ளக்காதல்..!! கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்த பெண்..!!