fbpx

Gold Rate | இல்லத்தரசிகளே..!! தங்கம் விலை இன்றைக்கு எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும், தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் தற்போது தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக கிடுகிடுவென சரிய தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ’No’ சொன்னாலும் விட மாட்டாரு..!! தொல்லை கொடுத்துட்டே இருப்பாரு..!! வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது பகீர் புகார்..!!

English Summary

In Chennai, the price of jewelery rose by Rs 400 to Rs 51,720.

Chella

Next Post

நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மதன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்...!

Sat Jul 27 , 2024
PM Modi condoles death of Master Madan.

You May Like